காற்பந்து: கத்தாரிடம் தோற்றது சிங்கப்பூர்

சிங்கப்பூர்: நடப்பு ஆசிய வெற்றியாளரான கத்தாரிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோற்றது சிங்கப்பூர். ஹோம் யுனைடெட் குழுவின் 23 வயது இக்ரம் ரிஃப்கி கத்தாரின் சொந்த மண்ணில் °வயாழக்கிழமை நடந்த அனைத்துலக ஆட்டத்தில் ஆறிமுகமானார்.

பயிற்சியில் கலந்துகொள்ளாத கெடாவின் ‌ஷாகிர் ஹம்ஸாவை பயிற்றுவிப்பாளர் தட்சுமா யோ‌ஷிடா களமிறக்கவில்லை. 20வது நிமிடத்தில் சிங்கப்பூரின் கோல் முயற்சியைத் தடுத்தாடினார் கத்தார் கோல்காப்பாளர். 31வது நிமிடத்திலும் அடுத்த நான்காவது நிமிடத்திலும் கோல் போட்ட கத்தார் தனது நிலையை வலுப்படுத்தியது.