நட்புமுறை ஆட்டத்தில் அர்ஜெண்டினா வெற்றி

ரியாத்: அனைத்துலக ஆட்டங்களில் பங்கேற்பது குறித்து விதிக்கப்பட்டிருந்த தடை முடிவுக்கு வந்தவுடன் அர்ஜெண்டின அணிக்குத் திரும்பிய நட்சத்திர ஆட்டக்காரர் லயனல் மெஸ்ஸி, நேற்று அதிகாலை நடைபெற்ற பிரேசிலுக்கு எதிரான நட்புமுறை ஆட்டத்தில் அர்ஜெண்டினாவின் வெற்றிக்கு வித்திட்டார்.

சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் நடந்த இந்த ஆட்டத்தின் ஒரே கோலை அவர் போட்டார். தென்னமெரிக்க காற்பந்துச் சம்மேளனத்தை “ஊழல் நிறைந்தது” என்று சாடிய மெஸ்ஸிக்கு நான்கு அனைத்துலக ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஜூலையில் ‘கோப்பா அமெரிக்கா’ கிண்ணத்தை ஏந்திய பிரேசில், கடைசியாக விளையாடிய ஐந்து ஆட்டங்களில் எதிலும் வெல்லவில்லை.