விக்கெட்டுகளை அள்ளும் பந்துவீச்சாளர்களை பாராட்டும் கோஹ்லி

இந்தூர்: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீச்சு திறனின் உச்சத்தில் உள்ளதாக மனம் நெகிழ்கிறார் அவ்வணியின் தலைவர் விராத் கோஹ்லி.

பங்ளாதேஷுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை அள்ளியது ஒரு முக்கிய காரணம்.

இப்போட்டியின் இரு இன்னிங்சிலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியது திருப்புமுனையாக அமைந்தது.

மேலும் இஷாந்த் ஷர்மா மூன்று, உமேஷ் யாதவ் நான்கு என மூவரும் மொத்தம் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த வேகப்பந்து வீச்சாளர்களைப் பாராட்டியுள்ள விராத் கோஹ்லி, “எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களத

பந்துவீச்சு திறனின் உச்சத்தில் உள்ளனர். இவர்கள் பந்து வீசும்போது, எந்த ஆடுகளமும் நல்ல ஆடுகளமாகவே தோன்றுகிறது. அவர்களுக்கு எனது பாராட்டுகள்.

“ஒவ்வொரு பகுதிகளிலும் நமது பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்கிறார்கள். எந்த ஒரு அணித்

தலைவரும் இத்தகைய வலிமையான பந்துவீச்சைத்தான் விரும்புவார். இது பந்துவீச்சில் ஒரு கனவுக் கூட்டணி போன்று உள்ளது.

“சாதனைகளையும் புள்ளிவிவரங்களையும் ஒவ்வொருவரும் பார்க்கிறார்கள். அதுதொடர்ந்து சாதனை புத்தகத்தில்தான் இருக்கும். நாங்கள் அதில் கவனம் செலுத்துவதில்லை.

“நாங்கள் இந்திய கிரிக்கெட்டின் தரத்தை மென்மேலும் மேம்படுத்துவதை நோக்கி பயணம் ெசய்கிறோம். இதற்காக அடுத்த தலைமுறை வீரர்களை ஊக்கப்படுத்துகிறோம்.

“இந்திய அணிக்காக முதல் முறையாக பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பிங்க் நிறப் பந்து பந்தடிப்பாளர்களுக்குக் கடும் சவாலாக இருக்கும் என்று கருதுகிறேன்,” எனப் பேசினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் 6வது தொடர் வெற்றியாகும் இது. 2013ல் டோனி இதே போல் 6 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றுள்ளார்.

மேலும் 52 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை வகித்து 32 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளார் கோஹ்லி. இதுதவிர இப்போட்டியில் அணித்தலைவராக டோனியின் சாதனை ஒன்றையும் கோஹ்லி முறியடித்துள்ளார்.

அதாவது கோஹ்லி தலைமையில் இந்தியாவுக்கு இது 10வது டெஸ்ட் இன்னிங்ஸ் வெற்றியாகும்.

முன்னாள் அணித்தலைவர் டோனி 9 முறை அவரது தலைமையில் இந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

முகமது அசாருதீன் தலைமையில் 8 இன்னிங்ஸ் வெற்றிகளையும் கங்குலி தலைமையில் 7 இன்னிங்ஸ் வெற்றிகளையும் இந்திய அணி பெற்றுள்ளது.

ராகுல் திராவிட், கபில்தேவ், பாலி உம்ரிகர் தங்கள் தலைமையில் 2 போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளனர்.

மேலும் இந்த வெற்றியின் மூலம் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி 300 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!