முதன்முறையாக பட்டம் வென்ற ஸிட்ஸிபாஸ்

லண்டன்: டென்னிஸ் தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் உள்ள வீரர்கள் இரு குழுக்களாக பங்கேற்கும் ஏடிபி டென்னிஸ் பட்டத்தை முதன்முறைாக கைப்பற்றினார் கிரிஸின் ஸ்டெபீனோஸ் ஸிட்ஸிபாஸ்.

இதில் ஆண்ட்ரே அகாசி குழுவில், ரபேல் நடால், டேனில் மெட்வேடவ், ஸ்டெபீனோஸ் ஸிட்ஸிபாஸ், அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், ஆகிய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

பிஜோன் ஃபோர்க் குழுவில், நோவக் ஜோக்கோவிச், ரோஜர் ஃபெடரர், டோமினிக் தியம், மெட்டியோ பெரிட்டினி ஆகிய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இத்தொடரில் பல முன்னணி வீரர்கள் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேற, இறுதிப் போட்டிக்கு ஆறாம் நிலை வீரரான கிரிஸின் ஸ்டெபீனோஸ் ஸிட்ஸிபாஸ்சும் ஐந்தாம் நிலை வீரரான டோமினிக் தியாமும் முன்னேறினர்.

பெரும் எதிர்பார்ப்பு மிக்க இறுதிப் போட்டியின் முதல் செட்டே ‘டை பிரேக்’ வரை சென்றதால், ஆட்டம் விறுவிறுப்படைந்தது.

அதில், டோமினிக் தியாம் கடுமையாகப் போராடி 7-6 என முதல் செட்டைக் கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து, ஆக்ரோஷமாக மீண்டெழுந்த ஸ்டெபீனோஸ் ஸிட்ஸிபாஸ், இரண்டாவது செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

மூன்றாவது செட்டில் இருவரும் விட்டுக் கொடுக்காமல் விளையாட, அதுவும் ‘டை பிரேக்’ வரை சென்றது.

இந்த செட்டில், இறுதிவரை போராடிய ஸிட்ஸிபாஸ், 7-6 என கைப்பற்றி பட்டத்தைத் தனதாக்கினார். 21 வயது ஸிட்ஸிபாஸ் இத்தொடரில் விளையாடிய எட்டு வீரர்களில் ஆக இளையவராவார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!