14 பந்தில் அரைசதம்; மேகாலயா வீரர் அபய் நேகி அசத்தல்

மும்பை: சையத் முஷ்டாக் அலி கிண்ண 20 ஓவர் போட்டியில் 14 பந்துகளில் அரைசதம் விளாசி சாதனை புரிந்துள்ளார் மேகாலயா வீரர் அபய் நேகி.

மிஜோரம் அணிக்கு எதிராகவும் மேகாலயா அணிக்காவும் விளையாடிய அபய் நேகி 6 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் உட்பட 14 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

அவர் 4 பந்தில் தொடர்ச்சியாக சிக்சர்களைப் பறக்கவிட்டது இன்னோர் சிறப்பாகும்.

இவரது இன்னிங்சினால் மேகாலயா அணி 20 ஓவர்களில் 207 ஓட்டங்கள் என்ற வலுவான நிலையை எட்டியது.

உத்தரகாண்ட்டைச் சேர்ந்த 27 வயது அபய் நேகி, ஷில்லாங் அணிக்கு எதிராக முதல் தர கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு அறிமுகமானார். ஜனவரி 2018ல் ராஞ்சியில் பெங்கால் அணிக்கு எதிராக 20 ஓவர் போட்டியில் அறிமுகமானார்.