நட்புமுறை ஆட்டம்: அர்ஜெண்டினா, உருகுவே சமநிலை

டெல் அவிவ்: இஸ்ரேலில் நேற்று அதிகாலை நடைபெற்ற நட்புமுறை காற்பந்து ஆட்டம் ஒன்றில் தென்னமெரிக்க குழுக்களான அர்ஜெண்டினாவும் உருகுவேயும் பொருதின. இந்த ஆட்டம் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது.

தென்னமெரிக்க காற்பந்துக் குழுக்கள் பொருதிய ‘கோப்பா அமெரிக்கா’ போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியது அர்ஜெண்டினா. ஆனால், அப்போட்டியைத் தொடர்ந்து அக்குழு மறுமலர்ச்சி கண்டு வருகிறது.

உருகுவே உடனான இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் அர்ஜெண்டினா சிறப்பாக விளையாடினாலும் ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் அக்குழு பின்னுக்குத் தள்ளப்பட்டது. உருகுவே தரப்பில் எடின்சன் கவானி அக்குழுவுக்கு முன்னிலை தந்தார்.

அரங்கிலிருந்த ரசிகர்கள், ஆட்டம் முழுவதும் அர்ஜெண்டினாவின் நட்சத்திர ஆட்டக்காரர் லயனல் மெஸ்ஸியை உற்சாகப்படுத்தினர். அதன் பலனாக ஆட்டத்தின் 63வது நிமிடத்தில் சக ஆட்டக்காரர் செர்ஜியோ அகுவேரோ கோல் போட்டு அர்ஜெண்டினாவுக்கு சமநிலையைத் தேடித் தர மெஸ்ஸி வழிவகுத்தார். ‘ஃப்‌ரீ கிக்’ மூலம் மெஸ்ஸி அனுப்பிய பந்தைத் தலையால் முட்டி அகுவேரோ லோலடித்தார்.

எனினும், ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் உருகுவேவுக்கு மீண்டும் முன்னிலை கிடைத்தது. ‘ஃப்‌ரீ கிக்’ மூலம் 20 மீட்டர் தொலைவிலிருந்து லூயிஸ் சுவாரெஸ் உதைத்த பந்து எதிரணி வலையை சீண்டியது. ஆனால், உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கவில்லை என துவண்டுவிடவில்லை அர்ஜெண்டின வீரர்கள். ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் அக்குழுவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதை கோலாக்கினார் மெஸ்ஸி. இதனால் ஆட்டம் சமநிலை கண்டது.

2022ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ணப் போட்டியை முன்னிட்டு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் தொடங்குகின்றன. அதற்கு முன்னதாக அர்ஜெண்டினா, உருகுவே குழுக்கள் பொருதும் கடைசி அனைத்துலக நட்புமுறை ஆட்டம் இது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!