யூரோ 2020க்குத் தகுதி பெற்ற வேல்ஸ்

கார்டிஃப்: அடுத்த ஆண்டு நடைபெறும் ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கு வேல்ஸ் தகுதி பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஹங்கேரியை வேல்ஸ் சந்தித்தது.

இந்த ஆட்டம் 2-0 எனும் கோல் கணக்கில் வேல்சுக்குச் சாதகமாக முடிந்தது.

வேல்சின் இரு கோல்களையும் ஏரன் ரேம்சே போட்டார். ஆட்டத்தைக் கைப்பற்றி ஐரோப்பியக் கிண்ணப் போட்டியில் இடம்பிடித்த வேல்ஸ் குழுவினர் தங்கள் தலைமைப் பயிற்றுவிப்பாளரான மான்செஸ்டர் யுனைடெட்டின் முன்னாள் நட்சத்திர வீரர் ரயன் கிக்சுடன் கொண்டாட்ட மழையில் நனைந்தனர்.

மற்றோர் ஆட்டத்தில் ஐரோப்பியக் கிண்ணப் போட்டிக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுள்ள ஜெர்மனி 6-1 எனும் கோல் கணக்கில் வடஅயர்லாந்தைப் பிழிந்தெடுத்தது.

ஜெர்மனியின் செர்கே நாபிரி ஹாட்ரிக் அடித்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி ஏற்படுத்திய ஜெர்மனி தமது குழுவை முழுமையாகப் புதுப்பித்து வருகிறது.

காற்பந்து உலகில் ஜாம்பவானாகத் திகழ்ந்து வந்த னெர்மனி விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க முனைப்புடன் உள்ளது.

இந்நிலையில், ஐரோப்பியக் கிண்ணப் போட்டிக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுள்ள ஹாலந்து, தகுதிச் சுற்றின் இறுதி ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றது.

எஸ்டோனியாவுடன் மோதிய ஹாலந்து 5-0 எனும் கோல் கணக்கில் எளிதில் வென்றது.

ஹாலந்தின் ஜியோர்னினோ வைனால்டம் மூன்று கோல்களைப் போட்டு தமது குழுவின் வெற்றிக்கு வித்திட்டார்.

சைப்ரசுக்கு எதிரான ஆட்டத்தில் பெல்ஜியம் கோல் மழை பொழிந்து 6-1 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது. தகுதி சுற்றின் பத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற பெல்ஜியம் 40 கோல்களைப் போட்டு அசத்தியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!