சுடச் சுடச் செய்திகள்

ஏமனை அடக்கிய சிங்கப்பூர் அணி

மனாமா: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஏமனை 2-1 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூர் தோற்கடித்தது.

இந்த ஆட்டம் நேற்று முன்தினம் பஹ்ரேன் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.

ஏமனில் உள்நாட்டுப் போர் நிகழ்வதால் ஆட்டம் பஹ்ரேனில் நடைபெற்றது.

ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் சிங்கப்பூருக்கு கார்னர் வாய்ப்பு கிட்டியது.

அதன் மூலம் அனுப்பப்பட்ட பந்தை வலை நோக்கி அனுப்பி கோலாக்கினார் இக்சான் ஃபாண்டி.

பிற்பாதி ஆட்டம் தொடங்கி ஏழு நிமிடங்களில் சிங்கப்பூரின் இரண்டாவது கோல் புகுந்தது.

இந்த கோலை ஹஃபிஸ் நூர் போட்டார். 

ஆட்டத்தின் 85வது நிமிடத்தில் ஏமனின் சலீம் அல் ஒம்சே கோல் போட்டார்.

ஆனால் இறுதி வரை முன்னிலையைத் தற்காத்த சிங்கப்பூர் வெற்றி பெற்று மூன்று புள்ளிகளைக் கைப்பற்றியது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் தேதியன்று பாலஸ்தீனத்துடன் சிங்கப்பூர் மோதுகிறது. ஐந்து நாட்கள் கழித்து பலம் பொருந்திய சவூதி அரேபியாவை சிங்கப்பூர் சந்திக்கும்.