இந்திய அணி இன்று அறிவிப்பு

கோல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணி தற்போது பங்ளாதேஷ் அணியுடன் விளையாடி வருகிறது. மூன்று ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

இரு டெஸ்ட் தொடர்களில் இந்தூரில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் பகல்-இரவாக கோல்கத்தாவில் நாளை தொடங்குகிறது. 

இந்திய அணி அடுத்து வெஸ்ட் இண்டீசுடன் விளையாடுகிறது. அந்த அணியுடன் மூன்று டி20 ஆட்டங்களிலும் மூன்று ஒருநாள் ஆட்டங்களிலும் ஆடுகிறது.

டி20 போட்டிகள் டிசம்பர் 6 ஆம் தேதி (மும்பை), 8ஆம் தேதி (திருவனந்தபுரம்) மற்றும் 11ஆம் தேதி (ஹைதராபாத்) நடைபெறும். ஒருநாள் போட்டிகள் டிசம்பர் 15 ஆம் தேதி (சென்னை), 18ஆம் தேதி (விசாகப்பட்டினம்) , 22 ஆம் தேதி (கட்டாக்) நடைபெறும்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிறந்த குழுக்களோடு போட்டியிடுவது சிட்டிக்குக் கடினமாக உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு, நாங்கள் எங்களை மேம்படுத்திக் கொண்டு, முன்னேறிச் செல்ல வேண்டும்,” என்று அக்குழுவின் நிர்வாகி கார்டியோலா. படம்: ஏஎப்பி

10 Dec 2019

கார்டியோலா: சிட்டியால் போட்டி போட முடியாது
பில்லியர்ட்ஸ் விளையாட்டின் நடப்பு உலக வெற்றியாளரும் உலகின் முதல் நிலை வீரருமான சிங்கப்பூரின் பீட்டர் கில்கிறிஸ்ட். படம்: சிங்கப்பூர் விளையாட்டுச் சங்கம்

பில்லியர்ட்ஸ் விளையாட்டின் நடப்பு உலக வெற்றியாளரும் உலகின் முதல் நிலை வீரருமான சிங்கப்பூரின் பீட்டர் கில்கிறிஸ்ட். படம்: சிங்கப்பூர் விளையாட்டுச் சங்கம்

10 Dec 2019

பில்லியர்ட்ஸ்: தொடர்ந்து 6வது முறையாக தங்கப்பதக்கம்

லெஸ்டர் சிட்டி குழுவிற்கான நான்காவது கோலைப் போட்டார் அதன் நட்சத்திர வீரர் ஜேமி வார்டி. படம்: ராய்ட்டர்ஸ்

10 Dec 2019

எதிர்பார்ப்பை அதிகரித்த லெஸ்டர் சிட்டி