ஆறு ஓவர்களில் அனைவரும் ஆட்டமிழப்பு; ஓர் ஓட்டம்கூட இல்லை

ஆறு ஓவர்களில் அனைவரும் ஆட்டமிழப்பு; ஓர் ஓட்டம்கூட இல்லை

1 mins read
430af17f-08e2-40bd-a0b1-1bcf162825fd
'சில்ரன்ஸ் வெல்ஃபேர்' பள்ளி அணி 754 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. படம்: இணையம் -

இந்திய உள்ளூர் கிரிக்கெட் போட்டியொன்றில் அணியின் அனைத்து வீரர்களும் ஒரு ஓட்டம்கூட எடுக்காமல் 'டக்அவுட்' ஆகி தோல்வியைத் தழுவினர்.

மும்பையில் நடந்த 'ஹாரிஸ் ஷீல்ட்' கிரிக்கெட் போட்டியில் 'சில்ரன்ஸ் வெல்ஃபேர் ஸ்கூல்' அணியின் அனைத்து வீரர்களும் 'டக் அவுட்' ஆக, கூடுதல் ஓட்டங்களாக கிடைத்த 7 ஓட்டங்கள் மட்டுமே அந்த அணிக்குக் கிடைத்தது.

இந்த அணியின் அனைத்து வீரர்களும் ஆறு ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.

முதலில் பந்தடித்த எதிரணியான சுவாமி விவேகானந்தர் பன்னாட்டுப் பள்ளி 39 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 761 ஓட்டங்கள் எடுத்தது.

விவேகானந்தா அனைத்துலகப் பள்ளியின் வேகப்பந்து வீச்சாளர் 3 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனையடுத்து 'சில்ரன்ஸ் வெல்ஃபேர்' பள்ளி அணி 754 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

3 மணி நேரத்தில் 'சில்ரன்ஸ் வெல்ஃபேர்' பள்ளி, 39 ஓவர்களை மட்டுமே வீசியதால் அபராதமாக 156 ஓட்டங்கள் விவேகானந்தா அணிக்கு வழங்கப்பட்டது.

ஆனால், நம்பிக்கையை மூலதனமாக்கி 'சில்ரன்ஸ் வெல்ஃபேர்' பள்ளி இறுதிவரை போராடியது குறிப்பிடத்தக்கது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்