வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 6ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 15ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 22ஆம் தேதி வரை நடக்கிறது.
இதற்கான இந்திய அணியில் துணைத் தலைவர் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியில் அவர் இடம் பிடித்து உள்ளார்.
காயத்தால் விளையாடாமல் இருந்த புவனேஷ்வர் குமார் ஒருநாள், 20 ஓவர் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முகமது ஷமி 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பங்ளாதேஷ் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டிருந்த சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் குருணால் பாண்டியாவிற்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை.
வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுன்டர் ஷிவம் டுபே இரண்டு தொடர்களுக்கான அணியிலும் இந்தியா சார்பாக இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.