பிரிஸ்பன்: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டேவிட் வார்னரின் சதத்தால் ஆஸ்திரேலியா வலுவான நிலையை எட்டியது.
முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 240 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, அசாத் சபீக் 76 ஓட்டங்களையும் அசார் அலி 39 ஓட்டங்களையும் முகமட் ரிஸ்வான் 37 ஓட்டங்களையும் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டாக் 4, கம்மின்ஸ் 3 ,ஹேசில்வுட் 2, நாதன் லயன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, பந்தடிக்கத் தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றைய ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 72 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது.
டேவிட் வார்னர் 151 ஓட்டங்களுடனும் மார்னஸ் லபுஸ்கேன் 55 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
தொடக்க வீரரான ஜோ பர்ன்ஸ் 97 ஓட்டங்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணியின் யாசிர் ஷா 1 விக்கெட் வீழ்த்தினார்.