மட்ரிட்: டேவிஸ் கிண்ண டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியொன்றில், ஆஸ்திரேலியாவும், கனடா அணியும் மோதின.
இதில் முதலாவதாக நடைபெற்ற ஒற்றையர் பிரிவு போட்டியில், 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் கனடாவின் வாசெக் பாஸ்பிசில் வெற்றிபெற்றார்.
இரண்டாவது ஒற்றையர் பிரிவு போட்டியில், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 3-6, 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்றார். வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரட்டையர் பிரிவில், 6-4, 6-4 என்று வெற்றி பெற்ற கனடா, அரையிறுதியில் செர்பியா அல்லது ரஷ்யாவை எதிர்கொள்ளும்.