மான்செஸ்டர் யுனைடெட்டிற்கு காத்திருக்கும் கடும் போட்டி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் விறுவிறுப்பான ஆட்டம் ஒன்றில் ஷெஃபீல்ட் யுனைடெட் காற்பந்துக் குழுவுடன் மான்செஸ்டர் யுனைடெட் பொருதுகிறது.

பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஷெஃபீல்டின் சொந்த மண்ணில் மேன்யூ விளையாடவுள்ளது. அதுவும், இபிஎல் பட்டியலில் தற்போது ஏழாவது இடத்தில் உள்ள மேன்யூவைவிட இரு இடங்கள் மேலே ஷெஃபீல்ட் யுனைடெட் இருப்பதால் ரசிகர்களிடையே இந்த ஆட்டத்திற்கான எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இரு குழுக்களுக்கும் இடையே ஒரு புள்ளி மட்டும்தான் வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மேன்யூ ஆட்டக்காரர்கள் சிறந்த ஆட்டத்திறனுடன் உள்ளனர். அனைத்து போட்டிகளிலும் கடைசியாக அக்குழு விளையாடியுள்ள ஆறு ஆட்டங்களில் ஐந்தில் வென்றுள்ளது.

எனினும், ஷெஃபீல்ட் உடனான ஆட்டம் கடினமான ஒன்றாக இருக்கும் என மேன்யூ நிர்வாகி ஒலே குனார் சோல்சியாருக்கு தெரியும். ஏனெனில், பிரிமியர் லீக்கில் ஷெஃபீல்ட் விளையாடியுள்ள கடைசி ஐந்து ஆட்டங்களில் எதிலும் தோல்வியுறவில்லை.

இந்நிலையில், அண்மைய ஆட்டங்களில் தாக்குதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் மேன்யூ, ஷெஃபீல்டுக்கு தோல்வியைத் தர முற்படும். எனினும், பிரிமியர் லீக்கில் மேன்யூ விளையாடிய கடைசி ஐந்து ஆட்ட முடிவுகள் வெற்றி, தோல்வி, சமநிலை என்று மாறி மாறி வருவதால் இந்த ஆட்டத்தில் அக்குழுவின் செயல்பாடு எப்படி அமையும் என்பது தெளிவாக கூற முடியாது.

குறிப்பிடும்படியாக, இம்மாத தொடக்கத்தில் போர்ன்மத் குழுவின் சொந்த அரங்கில் விளையாடிய ஆட்டத்தில் 1-0 எனும் கோல் கணக்கில் மேன்யூ மண்ணைக் கவ்வியது. தற்போது லீக் பட்டியலில் மேன்யூவைவிட போர்ன்மத் குழு ஒரு புள்ளி குறைவாக பெற்றுள்ளது.

பிரிமியர் லீக் தொடங்கப்பட்டதிலிருந்து ஷெஃபீல்டும் மேன்யூவும் ஆறு முறை பொருதியுள்ளன. அவற்றில் ஐந்து ஆட்டங்களில் மேன்யூ வென்றுள்ளது. இவ்விரு குழுக்களும் கடைசியாக 2007ஆம் ஆண்டில் பொருதின. அந்த ஆட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் மேன்யூ வாகை சூடியது.

இந்த லீக் பருவத்தில் ஷெஃபீல்ட் அதன் சொந்த அரங்கில் விளையாடிய ஆட்டங்களில் மூன்றில் தோல்வியுற்றது. லெஸ்டர் சிட்டி, சவுத்ஹேம்டன், லிவர்பூலுக்கு எதிராக அக்குழு தோற்றது. எனினும், கடைசியாக தனது சொந்த அரங்கில் பர்ன்லி குழுவுக்கு எதிராக விளையாடிய ஆட்டத்தில் 3-0 எனும் கோல் கணக்கில் ஷெஃபீல்ட் வென்றது.

நடப்பு லீக் பருவத்தில் ஷெஃபீல்டின் தற்காப்பு பலமாக உள்ளது. மேன்யூவின் தாக்குதல் ஆட்டம் தொடர்ந்து மேம்பட்டு வரும் நிலையில், ஷெஃபீல்டின் தற்காப்பை அக்குழு தகர்த்தெறியுமா என்பது இந்த ஆட்டத்தில் தெரிந்துவிடும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!