மட்ரிட்: டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றில் நேற்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஸ்பானிய வீரர் ரஃபாயல் நடாலும் அர்ஜெண்டின வீரர் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேனும் மோதினர். இதில் 6-1, 6-2 செட் கணக்கில் நடால் வெற்றி பெற்றார்.
இரட்டையர் பிரிவில் நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் அர்ஜெண்டினாவை 6-4, 4-6, 6-3 செட் கணக்கில் ஸ்பெயின் தோற்கடித்தது. இதனால் 2-1 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்று ஸ்பெயின் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
இதேபோல் பிரிட்டன் அணியும் ஜெர்மனி அணியைத் தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அரையிறுதியில் பிரிட்டன், ஸ்பெயின் அணிகள் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.