மவுன்ட்மாங்கானு: நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இம்மாதம் 21 முதல் நேற்று வரை மவுன்ட்மாங்கானுவில் நடைபெற்றது. இதில் பூவா தலையாவில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்தடித்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 353 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டு களையும் இழந்தது.
இதையடுத்து பந்தடித்த நியூசிலாந்து, 9 விக்கெட் இழப்பிற்கு 615 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அணித் தலைவர் கேன் வில்லியம்சன் அறிவித்தார்.
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதல் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 197 ஓட்டங்களில் அது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி தரப்பில் நெய்ல் வாக்னர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.