ஷெஃபில்ட்- மேன்யூ சமநிலை

ஷெஃபில்ட்- மேன்யூ சமநிலை

1 mins read
9b81a571-7ce1-42b9-b878-af87bbf115d3
ஷெஃபில்ட் யுனைடெட்டின் மூன்றாவது கோலைப் போட்டு கொண்டாடும் ஒலிவியர் மெக்பர்னி (வலது). படம்: ராய்ட்டர்ஸ் -

ஷெஃபில்ட்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட்டும் ஷெஃபில்ட் யுனைடெட்டும் தரப்புக்கு மூன்று கோல்கள் போட்டு சமநிலை கண்டன. ஒருகட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் ஷெஃபீல்ட் முன்னிலை வகித்தது. ஆனால் துவளாமல் போராடிய யுனைடெட் இரண்டு கோல்களை போட்டு ஆட்டத்தைச் சமன்செய்தது. அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் வெற்றியைத் தேடி தாக்குதல்களில் மும்முரமாக இறங்கிய யுனைடெட்டுக்குக் கைமேல் பலன் கிட்டியது. ஆட்டத்தின் 79வது நிமிடத்தில் மார்ஸ் ரேஷ்ஃபர்ட் யுனைடெட்டின் மூன்றாவது கோலைப் போட்டபோது யுனைடெட் வெற்றி பெறுவது நிச்சயம் என்று நம்பப்பட்டது. ஆனால் ஆட்டம் முடிய சில வினாடிகள் எஞ்சியிருந்தபோது ஷெஃபில்ட் அதன் மூன்றாவது கோலைப் போட்டு ஆட்டத்தைச் சமப்படுத்தியது. இதன் விளைவாக இரு குழுக்களுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தது.