லண்டன்: டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் காற்பந்துக் குழு, சுவீடன் நாட்டவரான ஸ்லாட்டான் இப்ராகிமோவிச்சை ஒப்பந்தம் செய்வதில் அர்த்தமில்லை என அக்குழு நிர்வாகி ஜோசே மொரின்யோ கூறியுள்ளார்.
ஸ்பர்ஸ் குழுவில் ஹேரி கேன் போன்ற தலைசிறந்த ஆட்டக்காரர்கள் இருப்பதே அதற்குக் காரணம் என்று அவர் விளக்கினார்.
மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகியாக மொரின்யோ பதவி வகித்த காலகட்டத்தில் இப்ராகிமோவிச், 38, ஒன்றரை பருவம் அவரது தலைமைத்துவத்தின்கீழ் விளையாடினார்.
மேன்யூவிற்காக 29 கோல்கள் போட்ட அவர், லீக் கிண்ணம், யூரோப்பா லீக் கிண்ணம் ஆகியவற்றை அக்குழு வெல்ல உதவினார்.
தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் கேலக்சி காற்பந்துக் குழுவிற்காக இப்ராகிமோவிச் விளையாடி வருகிறார்.