தோல்விக்குப் பழிதீர்க்க காத்திருக்கிறது லிவர்பூல்

லிவர்பூல்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் முதல் சுற்றில் நாளை அதிகாலை 4 மணிக்கு நடைபெறும் விறுவிறுப்பான ஆட்டம் ஒன்றில் லிவர்பூல், நேப்போலி குழுக்கள் மோதுகின்றன.

‘இ’ பிரிவில் முன்னணி வகிக்கும் லிவர்பூல், இத்தாலிய லீக்கில் விளையாடும் நேப்போலியைவிட ஒரு புள்ளி கூடுதலாக பெற்றுள்ளது. எனினும், இதே சுற்றில் கடந்த செப்டம்பரில் இவ்விரு குழுக்களும் மோதிய ஆட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் நேப்போலி வென்றிருந்தது. அந்த ஆட்டம் நேப்போலியின் அரங்கில் நடைபெற்றது.

இந்நிலையில், தனது சொந்த அரங்கில் நடைபெறும் எதிர்வரும் ஆட்டத்தில் பழிதீர்க்கும் விதமாக நேப்போலியை வென்று காட்ட வேண்டிய வேட்கையில் லிவர்பூல் உள்ளது.

இந்த ஆட்டத்தில் நேப்போலி தரப்பில் லொரென்ஸோ இன்சிக்னே விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலிய லீக்கில் கடந்த வாரயிறுதியில் ஏசி மிலான் குழுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடியபோது முழங்கையில் காயம் ஏற்பட்டது. அந்த ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. ஏசி மிலான் உடனான ஆட்டத்தையும் கணக்கில் சேர்த்துக்கொண்டால், அனைத்துப் போட்டிகளிலும் நேப்போலி விளையாடியுள்ள கடைசி ஆறு ஆட்டங்களில் எதிலும் அக்குழு வெல்லவில்லை.

தற்போது இத்தாலிய லீக் பட்டியலில் ஏழாவது நிலையில் நேப்போலி உள்ளது. லீக்கில் இதுவரை அக்குழு விளையாடியுள்ள 13 ஆட்டங்களில் ஐந்தில் மட்டுமே வாகை சூடியது. இதனால் அக்குழுவின் நிர்வாகி கார்லோ ஆன்சிலோட்டி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மாறாக, இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் முதல் நிலையை லிவர்பூல் வலுவாக்கிக்கொண்டுள்ளது. இதுவரை அக்குழு விளையாடியுள்ள 13 ஆட்டங்களில் எதிலும் தோல்வியுறவில்லை. மான்செஸ்டர் யுனைடெட்டிற்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் லிவர்பூல் சமநிலை கண்டது.

நேப்போலிக்கு எதிராக லிவர்பூலின் நட்சத்திர ஆட்டக்காரர் முகம்மது சாலா களமிறங்குவார் என்ற செய்திகள் நேற்று வெளியாகின. இந்தச் செய்தி லிவர்பூல் குழுவினருக்கு புதுத்தெம்பைத் தந்துள்ளது. அவரோடு சேர்ந்து ஃபர்மினோவும் சாடியோ மானேயும் களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இபிஎல்லில் கிரிஸ்டல் பேலஸ் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் சாலா விளையாடவில்லை. அந்த ஆட்டத்தில் 2-1 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது.

இந்த ஆட்டத்தில் நேப்போலியை லிவர்பூல் வெற்றி கண்டால் சாம்பியன்ஸ் லீக்கின் அடுத்த சுற்றுக்கு லிவர்பூல் தகுதி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.

வெலன்சியா, செல்சி மோதல்

‘எச்’ பிரிவில் இன்று பின்னிரவு 1.55 மணிக்கு நடைபெறும் மற்றோர் ஆட்டத்தில் வெலன்சியா, செல்சி குழுக்கள் மோதுகின்றன.

சாம்பியன்ஸ் லீக்கில் செல்சிக்கு எதிராக வெலன்சியா இதுவரை ஏழு முறை விளையாடியுள்ளது. அவற்றில் ஒருமுறை மட்டுமே வெலன்சியா வெற்றி கண்டது. எஞ்சிய ஆறு ஆட்டங்களில் அக்குழு மூன்றில் சமநிலையும் மூன்றில் தோல்வியும் கண்டது.

எனினும், இந்த ஆட்டம் வெலன்சியாவின் சொந்த அரங்கில் நடைபெறுவதால் செல்சி வீரர்கள் மெத்தனமாக இருக்க மாட்டார்கள்.

‘எச்’ பிரிவில் அயக்ஸ், வெலன்சியா, செல்சி ஆகிய மூன்று குழுக்களும் தலா ஏழு புள்ளிகள் பெற்றுள்ளன. எனினும், கோல் வித்தியாச அடிப்படையில் அயக்ஸ் குழு முதல் நிலையில் உள்ளது. செல்சி இரண்டாவது நிலையிலும் வெலன்சியா மூன்றாவது நிலையிலும் உள்ளன.

அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற இந்த மூன்று குழுக்களும் கடுமையாகப் போராடும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!