சென்னை: “அனைத்து ஆண்களும் திருமணத்துக்கு முன் சிங்கம்போல இருந்திருக்கலாம். ஆனால், திருமணத்துக்குப் பின் எல்லாம் மாறிவிடும். வயதான காலத்தில்தான் கணவருக்கும் மனைவிக்கும் இடையிலான உறவு பலமாகும்,” என்று இந்திய கிரிக்கெட் பிரபலம் டோனி கூறியுள்ளார்.
“திருமணத்தின் உண்மையான அர்த்தத்தை 50 வயதைக் கடந்த பின்தான் உணர முடியும். 55 வயதை அடையும்போது அதுதான் காதலின் உண்மையான வயது என்று நான் கூற முடியும்.
“உங்களுடைய அன்றாட வழக்கமான செயலில் இருந்து விலகிச் செல்ல முயல்வது அங்கிருந்துதான் தொடங்கும்,” என சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திருமணம் குறித்து டோனி பேசும் காணொளி ஒன்று வேகமாகப் பரவி வருகிறது.
“நான் என் மனைவி விரும்பும் அனைத்தையும் செய்ய அனுமதிக்கிறேன். ஏனென்றால் அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும்,” என நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.