அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஸ்பர்ஸ், சிட்டி

மான்செஸ்டர்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டிகளின் முடிவில் மான்செஸ்டர் சிட்டியும் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பரும் 16 அணிகள் அடங்கிய சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

மான்செஸ்டர் நகரின் எட்டிஹாட் அரங்கில் நடைபெற்ற ‘சி’ பிரிவு ஆட்டத்தில் உக்ரேனின் ஷக்டர் டொனட்ஸ்க் அணியுடனான போட்டியில் 1-1 என சமநிலை கண்டது சிட்டி. முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிவுற்ற நிலையில் 56வது நிமிடத்தில் இல்காய் குண்டோகன் அடித்த கோல் மூலம் சிட்டி முன்னிலை பெற்றது. இருப்பினும் பதில் வீரராக வந்த மனோர் சொலொமன் 69வது நிமிடத்தில் புகுத்திய கோல் டொனட்ஸ்க் அணியை சமநிலைக்கு உயர்த்தியது.

‘பி’ பிரிவு ஆட்டத்தில் வென்ற டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பரும் அதே முன்னேற்றத்தைக் கண்டது. ஸ்பர்ஸ் அணிக்குப் பொறுப்பேற்ற பின்னர் ஜோசே மொரின்யோவுக்கு யோகம் அடித்துள்ளது. கடந்த 19ஆம் தேதி அந்த அணியை வழிநடத்தும் பொறுப்பை ஏற்ற பின்னர் நேற்று அதிகாலை நடைபெற்ற ‘பி’ பிரிவு ஆட்டத்தில் ஒலிம்பியாகோஸ் அணியை 4-2 என வீழ்த்த அவரது வியூகம் கைகொடுத்தது எனலாம். அதன் மூலம் நாக் அவுட் சுற்றுக்கு ஸ்பர்ஸ் முன்னேறியது. மொரின்யோ பொறுப்பேற்குப் பின்னர் லண்டனில் டோட்டன்ஹாமின் சொந்த மண்ணில் நடைபெற்ற முதல் சாம்பியன்ஸ் லீக் போட்டியாக இது அமைந்தது.

கிரேக்க அணியான ஒலிம்பியாகோஸ் முதல் 20 நிமிடங்களுக்குள் கோல் புகுத்தி அதிர்ச்சி அளித்தது. யூசெல் எல் அரபி, ரூபன் செமோட்டோ ஆகியோர் மூலம் இது சாத்தியமானது. 29வது நிமிடத்தில் மொரின்யோ எடுத்த முடிவு கைமேல் பலனளித்தது. மத்தியகள ஆட்டக்கார் எரிக் டயருக்குப் பதில் எரிக் கிறிஸ்டியனை அவர் அனுப்பினார். அதனைத் தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் முடியும் முன்னரே டெலி அலி புகுத்திய கோல் மூலம் ஸ்பர்ஸ் எழுந்து நின்றது.

இரண்டாவது பாதியின் 50வது நிமிடத்தில் லூகாஸ் மௌரோ பரிமாற்றிய பந்தைக் கொண்டு ஹர்ரி கேன் கோலாக மாற்றினார். பின்னர் 73 ஆவது நிமிடத்தில் செர்கே அரிர் பெற்ற கோல் மூலம் ஸ்பர்ஸ் முன்னிலை பெற்றது. அடுத்த நான்காவது நிமிடத்தில் மற்றொரு கோல். கேனின் இரண்டாவது கோல் அது. இதற்குப் பின்னர் ஸ்பர்ஸின் வெற்றி உறுதியானது. இந்த கோல்கள் மூலம் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விரைவாக 20 கோல்கள் போட்ட வீரர் என்னும் பெருமை கேனை வந்தடைந்தது.

இதற்கு முன்னர் அலெசான்ட்ரோ டெல் பியரோ சாதித்ததை விட இரு போட்டிகள் குறைவாக 24 போட்டிகளில் இந்த சாதனையை கேன் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் பெயர்ன் முனிச்சுக்கு அடுத்து 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலுள்ள ஸ்பர்ஸ் 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெற்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!