மும்பை சிட்டி காற்பந்துக் குழுவை வாங்கிய மான்செஸ்டர் சிட்டியின் உரிமையாளர்

லண்டன்: மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுவின் உரிமையாளரான ஃபெரான் சொரியானோ இந்தியன் சூப்பர் லீக் காற்பந்துக் குழுவான மும்பை சிட்டியை வாங்கியுள்ளார்.

மும்பை சிட்டியின் 65% பங்குகளை வாங்கியது பற்றி நேற்று முன்தினம் கூறிய சிஎஃப்சி எனும் சிட்டி காற்பந்துக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி ஃபெரான் சொரியானோ கூறுகையில், “இந்தியாவில் உள்ள காற்பந்து ஆர்வலர்கள் ஐரோப்பிய ரசிகர்களைப் போலவே நடந்து கொள்கிறார்கள்.

"மேலும் வரும் ஆண்டுகளில் இந்தியாவில் காற்பந்து விளையாட்டு பெரும் வளர்ச்சி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

"அனுபவங்கள், தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொண்டு, இங்குள்ள வீரர்களை ஊக்குவிப்பதையே நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” என்று சொன்னார்.

மும்பை சிட்டியின் மீதமுள்ள 35 விழுக்காட்டு பங்கு பிமல் பரேக், பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரிடமே தொடர்ந்து இருக்கும்.

நியூயார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான், உருகுவே, ஸ்பெயின், சீனா உள்ளிட்ட நாடுகளின் காற்பந்துக் குழுக்களில் முதலீடு செய்துள்ள சிஎஃப்சி நிறுவனம் எட்டாவதாக இந்தியாவில் மும்பை சிட்டி குழுவை வாங்கியுள்ளது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!