புதிய ஒப்பந்தத்திற்கு தயார்: பெப் கார்டியோலா

மான்செஸ்டர்: மான்செஸ்டர் சிட்டி நிர்வாகியான பெப் கார்டியோலா தான் புதிய ஒப்பந்தத்திற்குத் தயார் என்று கூறியுள்ளார்.

பெப் கார்டியோலா கடந்த 2016ஆம் ஆண்டு மான்செஸ்டர் சிட்டி குழுவை நிர்வகிக்க வகை செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

பின்னர், ெசன்ற ஆண்டு அவரின் ஒப்பந்தகாலம் 2021ஆம் ஆண்டுவரை நீடிக்கப்பட்டது.

தற்பொழுது மான்செஸ்டர் சிட்டி குழு நிர்வாக சபையினருடன் புதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்றபோதிலும், பெப் கார்டியோலா, “இந்தக் குழுவில் இணைந்து பணியாற்றுவதில் மிக்க திருப்தி அடைந்த நிலையில் உள்ளேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

“ஒரு குறிப்பிட்ட குழுவில் நீங்கள் இணைந்து பணியாற்றியுள்ளீர்கள் என்றால், அந்தக் குழு ஆடிய ஆட்டங்களில் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறது என்பதைப் பொறுத்தது.

“இந்தக் காற்பந்துப் பருவம், அடுத்த பருவம் ஆகியவற்றில் மான்செஸ்டர் சிட்டி குழு எப்படி விளையாடுகிறது என்று பார்ப்போம்,” என்று கூறினார்.

பெப் கார்டியோலா நான்கு பருவங்களில் பார்சிலோனாவின் நிர்வாகியாக இருந்தார். அப்பொழுது நான்கு முறை லா லீகா கிண்ணத்தையும் இருமுறை சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

பின்னர், அங்கிருந்து பயர்ன் மியூனிக் குழுவில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். அந்த மூன்று பருவங்களிலும் ஜெர்மனியின் புண்டஸ்லீகா கிண்ணத்தை வென்றார் என்பது அவருக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.

மான்செஸ்டர் சிட்டியில் இரண்டு பருவங்களில் பிரிமியர் லீக் கிண்ணம், எஃப்ஏ கிண்ணம், இரண்டு லீக் கிண்ணம் ஆகியவற்றை வென்றுள்ள இவர், “இங்கு நீடித்திருப்பதற்கு நான் தயாராக உள்ளேன்.

“என்னைப் பொறுத்தவரை இந்தக் குழுவிலுள்ள வீரர்களின் எதிர்பார்ப்பை நான் அறிய விரும்புகிறேன்,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!