சிங்கப்பூர் காற்பந்துக் குழுவின் அரையிறுதிக் கனவு அநேகமாகக் கலைந்தது

மணிலா: மணிலாவில் நடைபெறும் தென்கிழக்காசிய விளையாட்டுகளின் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் சிங்கப்பூர் காற்பந்துக் குழுவின் கனவு அனேகமாகக் கலைந்தது எனலாம்.

நேற்று மாலை நடைபெற்ற ‘பி’ பிரிவு ஆட்டத்தில் நடப்பு வெற்றி யாளரான தாய்லாந்திடம் சிங்கப்பூர் 3-0 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது.

‘பி’ பிரிவில் இன்னும் இரு ஆட்டங்கள் எஞ்சியுள்ள வேளையில் சிங்கப்பூர் இதுவரை தான் பங்கேற்ற மூன்று ஆட்டங்களில் ஒரு கோல்கூட போடவில்லை.

முதல் ஆட்டத்தில் லாவோஸ் குழுவுடன் கோல் எதுவுமின்றி சம நிலை, இரண்டாம் ஆட்டத்தில் இந் தோனீசியாவுடன் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வி என்ற நிலை யில், சிங்கப்பூர் அடுத்து நாளை பலம் வாய்ந்த வியட்னாம் குழுவுட னும் வியாழக்கிழமை புருணை குழுவுடனும் விளையாடும். 

ஆட்டம் தொடங்கியதிலிருந்து தாய்லாந்து தொடர் தாக்குதல்களை முடுக்கி விட்டதன் பலனாக, ஆட் டத்தின் 7வது நிமிடத்திலேயே அது தனது முதல் கோலை ஜரோன்சாக் மூலம் போட்டது.

பின்னர் ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் 17வயது சுப்பானாட் முவென்தா தாய்லாந்தின் இரண்டா வது கோலைப் போட்டார். 36வது நிமிடத்தில் பீரவாட் அக்கடாம் தனது குழுவின் மூன்றாவது கோலைப் போட்டு வெற்றியை உறு திப்படுத்தினார்.

சிங்கப்பூர் குழு எவ்வளவோ முயன்றும் தாய்லாந்தின் வலுவான தற்காப்பு அரணை உடைக்க முடிய வில்லை.