லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் லிவர்பூல் வலுவான நிலையில் இருக்கிறது.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரைட்டனை அது 2-1 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தது.
லிவர்பூலின் இரண்டு கோல்களையும் வெர்ஜல் வேன் டைக் போட்டார். இதன் மூலம் 14 ஆட்டங்கள் விளையாடிய நிலையில் 40 புள்ளி களுடன் லிவர்பூல் லீக் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.
இரண்டாவது இடத்தில் உள்ள மான்செஸ்டர் சிட்டி விலர்பூலைவிட 11 புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளது. நியூகாசலுக்கு எதிரான ஆட்டத்தில் சிட்டி வெற்றி பெற தவறியது.
ஒருகட்டத்தில் 2-1 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்து வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது சிட்டி.
ஆனால் கடைசி நேரத்தில் நியூகாசல் கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தது.
மற்றோர் ஆட்டத்தில் செல்சி 1-0 எனும் கோல் கணக்கில் வெஸ்ட் ஹேமிடம் தோல்வியைத் தழுவியது.