யூரோவில் கடும் போட்டி

புக்காரெஸ்ட்: யூரோ 2020 காற்பந்துப் போட்டியின் ‘ஏ’ பிரிவில் இத்தாலி, சுவிட்சர்லாந்து, துருக்கி, வேல்ஸ் இடம்பெறுகின்றன.

‘பி’ பிரிவில் பெல்ஜியம், ரஷ்யா,  டென்மார்க், ஃபின்லாந்து உள்ளன. ‘சி’ பிரிவில் உக்ரேன், ஹாலந்து,  ஆஸ்திரியா உள்ளன.

‘டி’ பிரிவில் இங்கிலாந்து, குரோவேஷியா, செக் குடியரசு இடம்பெற்றுள்ளன. ‘இ’ பிரிவில் ஸ்பெயின், போலந்து, சுவீடன் உள்ளன. எஃப் பிரிவில் ஜெர்மனி, பிரான்ஸ்,  போர்ச்சுகல் உள்ளன. சி, டி, இ, எஃப் பிரிவுகளுக்கான நான்காவது குழு இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.