ஹேமில்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அணித் தலைவர் ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் இங்கிலாந்து அணி 476 ஓட்டங்களைக் குவித்து ‘ஆல் அவுட்’ ஆனது.
நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தின் ஹேமில்டனில் நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 375 ஓட்டங்களைக் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து, மூன்றாவது நாள் ஆட்டமுடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 269 ஓட்டங்களை எடுத்து இருந்தது. நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. 106 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், இங்கிலாந்து தொடர்ந்து ஆடியது.
ஜோரூட் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினார்.
அவர் 441 பந்துகளில் 22 பவுண்டரி, 1 சிக்சருடன் 226 ஓட்டங்களைக் குவித்தார்.