மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்று வரும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில், மலாய் தற்காப்புக் கலையான ‘சீலாட்’ விளையாட்டில் சிங்கப்பூர் நேற்று தங்கப் பதக்கம் வென்றது.
இந்த விளையாட்டின் இறுதிச் சுற்றில் சிங்கப்பூர் குழுவில் இடம்பெற்ற மூன்று வீரர்கள் மொத்தம் 466 புள்ளிகளைப் பெற்றனர். சீலாட் விளையாட்டில் ஏழு நாடுகள் போட்டியிட்டன. அதில்
சிங்கப்பூர் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டது.
தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இது சிங்கப்பூருக்கு கிடைத்துள்ள நான்காவது தங்கப் பதக்கம்.
பூப்பந்தில் சிங்கப்பூர்
மகளிருக்கு வெண்கலம்
இப்போட்டியின் பூப்பந்து விளையாட்டு அரையிறுதிச் சுற்றில் இந்தோனீசியாவிடம் 3-1 எனும் புள்ளிக் கணக்கில் சிங்கப்பூர் வீராங்கனைகள் நேற்று தோல்வியுற்றனர்.
மூன்றாம் நிலைக்கான ஆட்டம் நடைபெறாது என்பதால், கடந்த தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற வெண்கலப் பதக்கத்தை சிங்கப்பூர் தக்கவைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெறவிருக்கும் இறுதிச் சுற்றில் நடப்பு வெற்றியாளர் தாய்லாந்தை இந்தோனீசியா எதிர்கொள்கிறது.