‘சீ கேம்ஸ்’: அறிமுக விளையாட்டில் சிங்கப்பூரின் ஆண், பெண் குழுக்கள் தங்கம் வென்றன

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூரின் நீருக்கடியிலான ஹாக்கிப் போட்டி அணிகள் இரு தங்கப் பதக்கங்களை வென்றன. ஆண்கள் பிரிவும் பெண்கள் பிரிவும் தங்கம் வென்று சாதித்தன.

ஆண்கள் குழுவுக்கான ஆட்டம் மணிலாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள செர்மோசா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

சிங்கப்பூரை எதிர்த்து விளையாடிய பிலிப்பீன்ஸ் அணியினரால் ஒரு கோல்கூட போட இயலவில்லை. அவர்களின் திணறலை சிங்கப்பூர் அணி நன்றாகப் பயன்படுத்தி ஐந்து கோல்களைப் புகுத்தி வாகை சூடியது.

இந்த வெற்றி குறித்து பெருமகிழ்வு தெரிவித்த சிங்கப்பூரின் ‘அண்டர்வாட்டர் ஹாக்கி’ ஆண்கள் அணியின் பயிற்றுநர் டேவிட் லாம்பெர்ட் இந்த வெற்றியைப் பெற அணியினர் கடினமாக உழைத்ததாகக் கூறினார். “தண்ணீருக்குள் மூழ்கி விளையாடும்போது சில சமயங்களில் பிராணவாயு முழுமையாகத் தீர்ந்துவிடும். அப்போதும் அவர்கள் கடுமையாகப் பயிற்சி செய்வார்கள்,” என்றார் அவர்.

ஏழு நிமிடங்கள் நடைபெற்ற முதல் பாதியில் மட்டும் சிங்கப்பூர் குழு மூன்று கோல்களைப் புகுத்தியது. கோல் வேட்டையைத் தொடங்கி வைத்தவர் லுயு டோங்லியாங். எஞ்சிய இரு கோல்கள் பின்னர் கிடைத்தன.

மகளிர் அணியினரும் கடுமையாகப் போராடி வெற்றி பெற்றனர். ஆயினும் பிலிப்பீன்ஸ் மகளிர் அணி இரு கோல்களைப் புகுத்தியது. இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர் வென்றது.

நீருக்கடியில் ஹாக்கிப் போட்டி முதன்முறையாக ‘சீ கேம்ஸ்’ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அறிமுக போட்டியிலேயே சிங்கப்பூரின் ஆண், பெண் குழுவினர் வாகை சூடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!