பர்ன்லி: ேநற்று அதிகாலை இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டி ஒன்றில் பர்ன்லி எதிர்கொண்ட மான்செஸ்டர் சிட்டி குழு 4-1 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது.
இதன்மூம் மேன்சிட்டி மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளது.
நேற்றைய போட்டியில் மான்செஸ்டர் சிட்டியின் கேப்பிரியல் ஜீசஸ் இரண்டு கோல்கள் போட்டு பர்ன்லி குழுவை திக்குமுக்காட வைத்ததார்.
இதற்கு முன் அனைத்துப் போட்டிகளிலும் நடைபெற்ற ஐந்து ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்ற சிட்டி குழு நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றது அதன் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
ஆட்டநாயகனாக நேற்றுத் திகழ்ந்த கேப்பிரியல் ஜீசஸ், ஆட்டத்தின் 24ஆம் நிமிடத்தில் பந்து வளைந்து சென்று கோல் வலைக்குள் செல்லும் வண்ணம் மிக லாவகமாக பந்தை உதைத்தார் என்று கூறுகிறது பிபிசி செய்தி.
பின்னர் ஆட்டத்தின் 50ஆம் நிமிடத்தில் சக வீரர் பெர்னார்டோ சில்வா கொடுத்த பந்தை உதைத்து கோலாக்கினார்.
இவரைத் தொடர்ந்து மத்திய திடல் வீரர் ரோட்ரி 20 மீட்டர் தொலைவிலிருந்து பந்தை உதைத்து கோல் போட்டார்.
மான்செஸ்டர் சிட்டியின் இறுதி கோலை மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய ரியாட் மாஹ்ரெஸ் ஆட்டத்தின் 87ஆம் நிமிடத்தில் கோல் போட்டு பர்ன்லி குழுவை ஒருவழியாக மூட்டை கட்டி அனுப்பியது சிட்டி குழு.
பர்ன்லி குழுவுக்கு ஆறுதல் தரும் வகையில் ஆட்டம் முடியும் தறுவாயில், 89ஆம் நிமிடத்தில், பிரேடி என்பவர் கோல் போட்டார்.
நேற்று ெவற்றி பெற்றதன் வழி மான்செஸ்டர் சிட்டி தரவரிசையில் மீண்டும், லெஸ்டரை பின்னுக்குத் தள்ளி, இரண்டாம் இடத்தை எட்டிப் பிடித்துள்ளது.
லிவர்பூலிடம் தோல்வி, சாம்பியன்ஸ் லீக் போட்டியின் இரண்டு ஆட்டங்களில் சமநிலை, செல்சியைத் தப்பித்தோம் பிழைத்தோம் என குறுகிற கோல் வித்தியாசத்தில் வெற்றி, நியூகாசலுடன் 2-2 என சமநிலை என கடந்த ஒரு மாதமாக ேசார்வில் மூழ்கிக் கிடந்த மான்செஸ்டர் சிட்டி நேற்று அதிகாலை புத்துயிர் பெற்றது.
இதற்கு முன் கேப்பிரியல் ஜீசஸ் 10 ஆட்டங்களில் கோல் எதுவும் போடவில்லை என்றாலும் நேற்று அவர் விளையாடிய விதத்தை வைத்துப் பார்க்கும்பொழுது அது சற்றும் தெரியவில்லை என்று பிபிசி ெசய்தித் தகவல் தெரிவிக்கிறது. இவர் நேற்று மேலும் ஒரு கோல் போட்டு ஹாட்ரிக் சாதனை புரிவதற்கு வாய்ப்பு வந்தது என்றும் ஆனால் அவர் உதைத்த பந்து கோல் கம்பத்துக்கு அப்பால் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
மான்செஸ்டர் சிட்டியின் முக்கிய தாக்குதல் ஆட்டக்காரர் செர்ஜியோ அகுவேரோ காயம் பட்டிருக்கும் இந்நேரத்தில் இவர் துல்லியமாக கோல் போடும் நிலைக்குத் திரும்பியுள்ளது மான்செஸ்டர் சிட்டிக்கு ஒரு பெரிய ஆறுதலாக உள்ளது என்று கூறப்படுறது.