தொடர் தோல்வி: போட்டியிலிருந்து வெளியேறியது சிங்கப்பூர்

மணிலா: தென்கிழக்கு ஆசிய போட்டிகளில் நேற்று முன்தினம் வியட்னாமை எதிர்கொண்ட சிங்கப்பூர் காற்பந்துக் குழு 0-1 என தோல்வியைத் தழுவியது.

எனினும், ஆட்டம் தொடங்கும் முன்பே தாய்லாந்து லாவோசை 2-0 என்று வெற்றி கொண்டதை அடுத்து பட்டியலின் இரண்டாம் நிலையைப் பிடித்து தகுதி பெற்றுவிட்டதால், பட்டியலில் ஐந்தாம் நிலையில் இருக்கும் சிங்கப்பூர் வியட்னாமை சந்திக்கும் முன்னரே போட்டியிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

போட்டியில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ள போதிலும் நேற்றைய ஆட்டம் தமக்கு திருப்தி அளிப்பதாக சிங்கப்பூர் அணியின் பயிற்றுவிப்பாளர் ஃபாண்டி அகமது விளக்கினார்.

“ஆட்டத்தின் முடிவு மகிழ்ச்சியைத் தரவில்லை என்றபோதும் வீரர்கள் விளையாடிய விதம் எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

“தோல்வி எங்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தபோதிலும், போட்டியில் சிறந்த குழுவுக்கு எதிராக நாங்கள் மிக நன்றாக விளையாடிய ஆட்டம் இது.

“நாங்கள் கடுமையாகப் போராடினோம், அத்துடன் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகம் குழுவினரிடம் இருந்தது.

“சிறந்த உத்திகளை வகுத்து நாங்கள் விளையாடினோம். எங்கள் வீரர்களும் இயன்றவரை போராடினர்.

“முதல் பாதி ஆட்டத்தில் எங்களுக்கு பல வாய்ப்புகள் இருந்ததும் வியட்னாமுக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்பதும் கண்கூடு.

“இரண்டாம் பாதி ஆட்டத்தில் வியட்னாம் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதில் ஒரேயொரு தவறு செய்து கார்னர் வாய்ப்பை விட்டுக்கொடுத்தோம்.

“அதைப் பயன்படுத்தி வியட்னாம் கோல் போட்டது,” என்று விரக்தியுடன் கூறினார் ஃபாண்டி அகமது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!