இபிஎல்: எவர்ட்டனை புரட்டி எடுத்த லிவர்பூல்

ஆன்ஃபீல்ட்: இங்கிலிஷ் காற்பந்து உலகில் 1935ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்பொழுதுதான் முதல் பாதி ஆட்டத்திலேயே லிவர்பூலை தனக்கு எதிராக நான்கு கோல்கள் போட விட்டுள்ளது.

நேற்று அதிகாலை இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தின் முடிவில் எவர்ட்டன் குழுவை 5-2 என புரட்டிப் போட்ட லிவர்பூல் முதல் பாதி ஆட்டத்திலேயே நான்கு கோல்கள் போட்டு எவர்ட்டனை விழி பிதுங்கச் செய்தது.

இந்த ஆட்ட முடிவால், லிவர்பூல் குழு பிரிமியர் லீக் தரவரிசையில் தனது முன்னணி நிலையைத் தக்கவைத்துக் கொண்டது ஒருபுறமிருக்க, அந்த வரிைசயில் 18ஆம் நிலைக்கு எவர்ட்டன் குழு சென்றுள்ளது. இதனால், அதன் நிர்வாகி மார்க்ேகா சில்வா எந்நேரமும் பதவியிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

லிவர்பூல் கோல்காப்பாளரான அலிசன் முந்தைய ஆட்டத்தில் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு நேற்றைய ஆட்டத்தில் விளையாட தடை ஏற்பட்டது ஒருபுறம், காயம் காரணமாக ஃபேபின்யோ என்ற மத்திய திடல் வீரர் விளையாட முடியாமல் போனது மறுபுறம் என்ற நிலை இருந்தும் லிவர்பூல் நிர்வாகியான யகர்ன் கிளோப், முக்கிய தாக்குதல் ஆட்டக்காரர்களான முகமது சாலா, ஃபெர்மினோ ஆகியோரை களமிறக்காமலேயே எதிரணியை புரட்டிப் போட்டது பலரை ஆச்சரியத்தில் தள்ளியது.

இவ்வாறு இருந்தும் முதல் பாதி ஆட்டத்திலேயே நான்கு கோல்கள் போட்டு எவர்ட்டனை வீழ்த்தியது லிவர்பூல். இதில் ஆட்டம் தொடங்கிய 17 நிமிடங்களிலேயே முகமது சாலா இரண்டு சந்தர்ப்பங்களில் கொடுத்த பந்தை டிவோக் ஒரிகி என்பவரும் பின்னர் ஷெர்டன் ஷக்கிரி என்பவரும் கோல்களாக மாற்றினர்.

பின்னர், ஆட்டத்தின் 31ஆம் நிமிடத்தில் ஒரிகி மீண்டும் கோல் போட முதல் பாதி ஆட்டம் முடியும் தறுவாயில் முகமது சாலாவும் தமது பங்குக்கு ஒரு கோல் போட்டார்.

இடையில், ஆட்டத்தின் 21ஆம் நிமிடத்தில் எவர்ட்டனின் மைக்கல் கீன் ஒரு கோலும், முதல் பாதி ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் ரிச்சார்லிசன் என்பவர் ஒரு கோலும் போட்ட போதும் லிவர்பூலின் வெற்றிப் பயணத்திற்கு எவ்வித தடங்கலும் ஏற்படவில்லை.

மாறாக, முழு நேர ஆட்டத்தின் முடிவில் லிவர்பூலின் வைன்ஹால்டம் மேலும் ஒரு கோல் போட்டு எவர்ட்டனுக்கு தீராத வலியை ஏற்படுத்தினார்.

தற்போதைய நிலையில் தரவரிசையில் கீழிருந்து மூன்றாம் நிலைக்கு எவர்ட்டன் தள்ளப்பட்டுள்ளதால் அதன் நிர்வாகி மார்க்கோ சில்வா எப்பொழுது பதவியிலிருந்து தூக்கி எறியப்படுவார் என்ற கேள்வியே அனைவர் மனதிலும் முக்கியமாக இடம்பெற்று உள்ளது. மற்றோர் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ஜோசெ மொரின்யோ தமது ஸ்பர்ஸ் அணியைக் கொண்டு யுனைடெட் குழுவை வெற்றி கொண்டு பழிதீர்த்துக் கொள்ளலாம் என்ற கனவு கனவாகவே முடிந்தது.

ஆம், மான்செஸ்டர் யுனைடெட் தனது ஓல்ட் டிராஃபர்ட் மைதானத்தில் ஸ்பர்ஸ் அணியை 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் வீழ்த்தியது. இதில் யுனைடெட்டின் தாக்குதல் ஆட்டக்காரரான மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் இரண்டு கோல்களையும் போட்டு அணிக்கு தமது முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டினார்.

வேறு ஆட்டங்களில், லெஸ்டர் அணி வாட்ஃபர்ட் அணியை 2-0, செல்சி அணி ஆஸ்டன் வில்லா அணியை 2-1 என வெற்றி கொண்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!