ஜோசப் ஸ்கூலிங்கை தோற்கடித்த ஸென்

ஜோசப் ஸ்கூலிங்கை தோற்கடித்த ஸென்

1 mins read
62a0bb2f-b449-49cc-a8dc-2174d916e078
தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று நடந்த 50 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியில் சிங்கப்பூரின் டியோ சென் வெய் 23:55 நேரத்தில் கடந்து சிங்கப்பூரின் நடப்பு வெற்றியாளரான ஜோசப் ஸ்கூலிங்கை தோற்கடித்தார். படம்: ராய்ட்டர்ஸ் -

சிங்கப்பூர்: தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று நடந்த 50 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியில் சிங்கப்பூரின் டியோ சென் வெய் 23:55 நேரத்தில் கடந்து சிங்கப்பூரின் நடப்பு வெற்றியாளரான ஜோசப் ஸ்கூலிங்கை தோற்கடித்தார்.

"இது கடுமையான போட்டி. ஸென் வெய் சிறப்பாக நீந்தினார். இது அவருக்கு ஒரு நல்ல தொடக்கமாக அமைந்தது என்றார் ஜோசப் ஸ்கூலிங். மேலும் அவர் கூறுகையில், என்னால் இயன்றவரை முயற்சி செய்தேன்.

மற்ற யாரும் என்னை முந்திக்கொண்டு செல்லாமல் சக வீரரே முந்திச் சென்றதால் தோல்வி எனக்கு அதிக வருத்தத்தைத் தரவில்லை," என்றார். தங்கம் வென்ற டியோ ஸென் வெய் கூறுகையில், ஜோசப் ஸ்கூலிங் எனது சகோதரர். ஒவ்வொரு நாளும் நாங்கள் இருவரும் ஒன்றாகவே பயிற்சியில் ஈடுபடுவோம்.

"நான் இந்த முறைதான் தங்கம் வென்றுள்ளேன். ஆனால் ஜோசப் அப்படியில்லை, பல தங்கங்களைப் பார்த்துவிட்டார். இன்னும் எவ்வளவோ பார்க்கப்போகிறார்," என்றார்.