டாக்கா: ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை 0-2 என மோசமான வகையில் இழந்தது, பாகிஸ்தான் கிரிக்கெட் பெருமையைக் காயப்படுத்திவிட்டது என பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் அசார் அலி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது பாகிஸ்தான்.
அந்த இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவின் அசுர பந்துவீச்சைக்கும் பந்தடிப்புக்கும் பாகிஸ்தான் வீரர்களால் ஈடுகொடுத்து விளையாடமுடியவில்லை. எனவே இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் படுதோல்வியடைந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் தோல்வியடைந்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் தனது பெருமைய இழந்துள்ளது என்று தெரிவித்துள்ளார் அந்த அணியின் தலைவர் அசார் அலி.
இதுகுறித்து அசார் அலி கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு போட்டிகளிலும் நாங்கள் பெற்ற தோல்வியின் விதம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. ஆஸ்திரேலியா மண்ணில் தோற்றதால் பாகிஸ்தான், கிரிக்கெட் பெருமையை இழந்துவிட்டது. இதை ஏற்றுக்கொள்ள கஷ்டமாக உள்ளது.
“நாங்கள் ஆஸ்திரேலியாவுக்குச் சரியான தயார்நிலையிலும், நேர்மறையான மனநிலையுடனும்தான் சென்றோம். இரண்டு போட்டிகளிலும் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. இதற்காக நான் சாக்குபோக்குச் சொல்ல விரும்பவில்லை,’’ என்றார்.