சிங்கப்பூருக்கு மேலும் இரண்டு தங்கங்கள்

சிங்கப்பூருக்கு மேலும் இரண்டு தங்கங்கள்

1 mins read
9e56c1d2-4b0c-4729-bf41-a2bb4eef488e
எதேச்சை பாணி 200 மீட்டர் நீச்சல் போட்டியில் சிங்கப்பூரின் டேரன் சுவா (நடுவில்) 48.26 வினாடிகளில் நீந்தி தங்கம் வென்றார். இரண்டாவது இடத்தை மலேசியாவின் வெல்சன் சிம் (இடது) (1:48.52) பிடித்தார். மூன்றாவதாக வெண்கலப் பதக்கம் வென்ற வியட்னாமின் ஹோங் குய் புவோக். இவர் 1:48:59 வினாடிகளில் கடந்தார். படம்: சாவ் பாவ் -

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் சிங்கப்பூர் மேலும் இரண்டு தங்கங்களை வென்றுள்ளது.

எதேச்சை பாணி 200 மீட்டர் நீச்சல் போட்டியில் சிங்கப்பூரின் டேரன் சுவா 48.26 வினாடிகளில் நீந்தி தங்கம் வென்றார். இரண்டாவது இடத்தை மலேசியாவின் வெல்சன் சிம் (1:48.52) பிடித்தார்.

பாய்மரப் படகுப்போட்டியில் சிங்கப்பூரின் நடப்பு வெற்றியாளரான ரியான் லோ தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.