பில்லியர்ட்ஸ்: தொடர்ந்து 6வது முறையாக தங்கப்பதக்கம்

சிங்கப்பூர்: பில்லியர்ட்ஸ் விளையாட்டின் நடப்பு உலக வெற்றியாளரும் உலகின் முதல் நிலை வீரருமான சிங்கப்பூரின் பீட்டர் கில்கிறிஸ்ட் (படம்) தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் தொடர்ந்து ஆறாவது முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

பிலிப்பீன்சில் நடந்து வரும் இப்போட்டிகளில் பிரபலமான வீரரான நே தவேவை 3-0 என வீழ்த்தினார் பீட்டர் கில்கிறிஸ்ட். கடந்த 2009ல் லாவோஸில் நே தவேவை வீழ்த்தி முதன்முறையாக தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, பூப்பந்து எனப்படும் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட சிங்கப்பூரின் லோ கியன் இயூ ஏமாற்றமளித்தார். 

நேற்று நடந்த ஒற்றையர் இறுதிப் போட்டியில் இவர் மலேசியாவின் லீ ஜீ சியாவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தை 21-18 என வென்ற மலேசிய வீரர் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

அரையிறுதியில் தாய்லாந்து வீரரை 16-21, 21-6, 21-9 என வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்த சிங்கப்பூரின் 22 வயது லோ வெள்ளிப்பதக்கத்தோடு திரும்பினார்.