பாகிஸ்தான் சென்ற இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி

பாகிஸ்தான் சென்ற இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி

1 mins read

கராச்சி: குணரத்னே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக நேற்று பாகிஸ்தான் சென்று சேர்ந்தது.

2009ல் இலங்கை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்கு தலையடுத்து டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்ற இலங்கை வீரர்களுக்கு இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாகிஸ்தான் செல்வதற்காக அறிவிக்கப்பட்ட இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த சுராங்க லக்மல் டெங்கி காய்ச்சல் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளது அந்த அணிக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி வருகிற 11ஆம் தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது.

2வது டெஸ்ட் போட்டி 19ஆம் தேதி கராச்சியில் தொடங்கவுள்ளது.