மேசைப் பந்தில் சிங்கப்பூர் இரண்டு தங்கம்

மேசைப் பந்தில் சிங்கப்பூர் இரண்டு தங்கம்

1 mins read
14370e5e-5723-45dd-850a-bc1e2952c90c
ஆண்கள், பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டங்களில் சிங்கப்பூரர்களே மோதியதால் தங்கமும் வெள்ளியும் சிங்கப்பூருக்கே வந்து சேர்ந்தது. படம்: ஃபேஸ்புக்/சிங்கப்பூர் மேசைப் பந்துச் சங்கம் -

மணிலா: பிலிப்பீன்சில் நடைபெற்று வரும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் மேசைப் பந்து விளையாட்டில் ஒற்றையர் பிரிவில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை சிங்கப்பூர் ஒட்டுமொத்தமாக அள்ளியது.

ஆடவர் பிரிவில் கோன் பாங் 11-5, 11-7, 11-7, 12-10 என நேர் செட்களில் கிளாரென்ஸ் சியூவைத் தோற்கடித்து, தங்கப் பதக்கத்தைத் தனதாக்கினார். 18 வயதுக்குட்பட்டோருக்கான உலகத் தரவரிசையில் கோன் பாங் முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியிலும் ஃபெங் தியான்வை, லின் யே என இரு சிங்கப்பூரர்களே மோதினர். இதில் ஃபெங் 11-6 என முதல் செட்டைக் கைப்பற்றிய போதும் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியதால் லின்னுக்குத் தங்கம் கிட்டியது.

இதனிடையே, ஜியு ஜிட்சு தற்காப்பு விளையாட்டில் 62 கிலோ பிரிவில் சிங்கப்பூரின் கான்ஸ்டன்ஸ் லியன் தங்கம் வென்றார்.