ஒருவழியாக வென்ற லிவர்பூல்

சால்ஸ்பர்க்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டம் ஒன்று இங்கிலாந்தின் லிவர்பூல் குழுவிற்கும் ஆஸ்திரியாவின் சால்ஸ்பார்க் குழுவிற்கும் இடையே நேற்று அதிகாலை நடைபெற்றது.

இதில் ஆட்டத்தின் முதல் பாதியில் பல சமயங்களில் தத்தளித்த லிவர்பூல் இறுதியில் இரண்டு நிமிடங்களில் இரண்டு கோல்கள் போட்டு சால்ஸ்பர்க் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

சாம்பியன்ஸ் லீக்கின் 24 ஆட்டங்களில் 87 கோல்கள் போட்டு அனைவரையும் மூக்கில் மேல் விரல் வைத்து ஆச்சிரியத்துடன் பார்க்க வைத்த சால்ஸ்பர்க் முதல் பாதி ஆட்டத்தில் லிவர்பூல் அணியையும் திக்குமுக்காடவைத்தது.

ஆனால், ஆட்டத்தின் 57ஆம் நிமிடத்தில் லிவர்பூலின் நாபி கெய்டா முதல் ேகாலைப் போட்டவுடன் நிலைமை மாறியது.

அதைத் தொடர்ந்து அடுத்த நிமிடத்திலேயே முகமது சாலாவும் தமது பங்குக்கு இக்கட்டான ஒரு பகுதியிலிருந்து கோல் போட்டது லிவர்பூலுக்கு தெம்பைத் தந்ததாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.

லிவர்பூல் அணியின் நிர்வாகி யகர்ன் கிளோப் தமது அணி புத்திசாலித்தனமாக விளையாடியதாகக் கூறுகிறார்.

“சால்ஸ்பர்க் அணி எவ்வளவு திறமையான அணி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், எனது அணி புத்திசாலித்தனமாக ஆட்டத்தைக் கையாண்டு வெற்றி பெற்றது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

“சால்ஸ்பர்க் நம்பமுடியாத அளவுக்கு வலுவான அணி, குறிப்பாக, முதல் பாதி ஆட்டத்தில். எனினும், நாங்களும் அதற்கு தயாராகவே இருந்தோம்,” என்று கிளோப் விளக்கமளித்தார்.

இந்தப் போட்டி குறித்து கருத்துரைத்த சால்ஸ்பர்க் அணியின் நிர்வாகி ஜெஸ்ஸி மார்ஸ்ச், “இந்தப் போட்டி ஒரு அதிக எடைப்பிரிவின் குத்துச் சண்டை போட்டி போன்றது.

“நாங்கள் உண்மையிலேயே கடுமையாகப் போராடினோம். எனினும், அவர்களும் பதில் தாக்குதல் நடத்தினார்கள்.

“இறுதியில் அவர்கள் கூடுதலாக இரண்டு குத்துகள் விட்டனர். எங்களுக்கு இடையேயான போட்டி அவ்வளவு நெருக்கமான ஒன்றாக இருந்தது.

“அதுவே சாம்பியன்ஸ் லீக் போட்டியில் வெற்றிக்கும் தோல்விக்குமான இடையேயான இடைவெளியானது,” என்று மிக அற்புதமாக விளக்கமளித்தார்.

மற்றோர் ஆட்டத்தில் முதல் பாதி ஆட்டத்திலேயே இரண்டு கோல்கள் போட்டு முன்னணி நிலை பெற்ற செல்சி, ஆட்டத்தின் 78ஆம் நிமிடத்தில் பிரான்சின் லில் அணி ஒரு கோல் போட எங்கே அந்த அணி இரண்டாவது கோல் போட்டு ஆட்டத்தை சமப்படுத்திவிடுமோ என்ற அச்சத்தில் எஞ்சிய நிமிடங்களைக் கடந்தது.

இறுதியில் லிவர்பூல் அணி அதற்குமேல் கோல் போட முடியாமல் போக செல்சி 2-1 என வெற்றி பெற்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!