ஹேசுஸ் உதவியுடன் மான்செஸ்டர் சிட்டி வெற்றி

ஸாக்ரெப்: இந்தப் பருவத்தில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் வெற்றியாளர் பட்டத்தை கிட்டத்தட்ட லிவர்பூலுக்கு விட்டுக்கொடுத்து விட்ட நிலையில் மான்செஸ்டர் சிட்டி ஓரளவு நம்பிக்கை வைத்திருப்பது சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வெல்வதில்தான்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை குரோவேஷிய குழுவான டைனமோ ஸாக்ரெப்பை எதிர்கொண்ட சிட்டி குழு ஆட்டத்தின் 10ஆம் நிமிடத்திலேயே ஒரு ேகால் விட்டுக்கொடுக்க நேர்ந்தபோது அதிர்ச்சிக்குள்ளானது.

ஆனால், சிட்டி அணியில் தாக்குதல் வீரரான ெசர்ஜியோ அகுவேரோ காயம் காரணமாக விளையாட முடியாமல் போனபின் அவருக்கு பதிலாக புதிய தாக்குதல் ஆட்டக்காரராக பரிணமத்துள்ளார் கேப்பிரியல் ஹேசுஸ்.

ஆட்டத்தின் 34ஆம் நிமிடத்தில் அவர் போட்ட கோல் சிட்டிக்கு சமநிலையைப் பெற்றுத்தந்தது. அதைத் தொடர்ந்து அவர் இரண்டாம் பாதி ஆட்டத்தின் 50, 54ஆம் நிமிடங்களில் மேலும் இரண்டு கோல்கள் போட்டு மான்செஸ்டர் சிட்டி டைனமோ ஸாக்ரெப் குழுவை வீழ்த்த உதவினார்.

இதற்குப் பின் சிட்டி அணியில் 19 வயது இளையரான ஃபோடன் என்பவர் தமது பங்குக்கு ஒரு கோல் போட்டு இறுதியில் மான்செஸ்டர் சிட்டி 4-1 என வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் தமது கோல்கள் பற்றிக் குறிப்பிட்ட ஹேசுஸ், “தற்பொழுது எனது ஆட்டத்தில் கோல்கள் வந்த வண்ணம் உள்ளன.

எனக்கு இதில் மிகவும் மகிழ்ச்சி, எனது ஆசையெல்லாம் நான் தொடர்ந்து கோல் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான்.

“எனது பணியை நான் செவ்வனே செய்ய வேண்டும். எனது பந்து எனது வசம் வருகிறதோ இல்லையோ, நான் கோல்கள் போட்டு அணி வெற்றி பெற உதவ வேண்டும்.

“கடந்த மாதம் என்னால் கோல் போட முடியவில்லை என்பதால், எனக்கு மிகுந்த மன வருத்தம் இருந்தது,” என்று கூறினார்.

ேநற்றைய ஆட்டம் முழுவதிலும் மான்செஸ்டர் சிட்டி தனது ஆதிக்கத்தை செலுத்தியது என்றும் அதன் பயனாக முதல் பாதியிலேயே ரியாட் மாஹ்ரெஸ் கொடுத்த பந்தை ஹேசும் கோலாக்கி சிட்டியை காப்பாற்றினார் என்று பிபிசி செய்தித் தகவல் தெரிவிக்கிறது.

பின்னர், ஆட்டத்தின் 54ஆம் நிமிடத்தில் ஃபோடன் கொடுத்த பந்தை எதிரணியின் கோல் வலையின் ஒரு ஓரத்தில் பந்தை செலுத்தி கோலாக்கினார்.

அதைத் தொடர்ந்து அடுத்த நான்கு நிமிடத்திலேயே சிட்டி வீரர் மென்டி கொடுத்த பந்தை கோலாக்கி ஆட்டத்தில் தமது முத்திரையை பதித்தார்.

மற்றோர் ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஸ்பர்ஸ் அணி 1-3 என ெஜர்மனியின் பயர்ன் மியூனிக் அணியிடம் தோல்வியைத் தழுவியது.

ஸ்பர்ஸ் அணிக்கான ஒரே கோலை ஆட்டத்தின் 20ஆம் நிமிடத்தில் செசங்கியோன் என்பவர் போட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!