இபிஎல் காற்பந்து: கோல் மழை பொழிய வாய்ப்பு

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கவிருக்கும் முக்கியமான ஆட்டத்தில் ஆர்சனல் குழு தனது எமிரேட்ஸ் அரங்கில் மான்செஸ்டர் சிட்டி குழுவை எதிர்கொள்கிறது.

இவ்விரு குழுக்களுமே தற்காப்பில் பலவீனமாகக் காட்சியளிப்பதால் இந்த ஆட்டத்தில் கோல் மழை பொழியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு குழுக்களுமே இன்றைய ஆட்டத்தில் வெல்ல வேண்டிய இக்கட்டில் உள்ளன. சிட்டி குழு 32 புள்ளிகளுடன் பட்டியலின் மூன்றாம் இடத்தில் இருந்தாலும் முதலிடத்தில் உள்ள லிவர்பூலைவிட 14 புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளது. வாட்ஃபர்ட் குழுவிற்கு எதிரான நேற்றைய ஆட்டத்திலும் லிவர்பூல் வென்றிருக்கும் பட்சத்தில் புள்ளி வித்தியாசம் 17ஆக உயர்ந்திருக்கும்.

இந்நிலையில், சிட்டி நிர்வாகியாக இருக்கும் பெப் கார்டியோலா இந்தப் பருவத்துடன் விடைபெறலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. பதவியில் நீடிக்க கார்டியோலா விருப்பம் தெரிவித்திருந்தாலும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சம் அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் எனத் தெரிகிறது.

இத்தகைய சூழலில், இந்தப் பருவத்தில் தடுமாறி வரும் சிட்டியை மீட்டெடுக்க வேண்டிய நிலையில் உள்ளார் கார்டியோலா.

முன்னணி தாக்குதல் ஆட்டக் காரர் செர்ஜியோ அகுவேரோ, தற்காப்பு வீரர் ஜான் ஸ்டோன்ஸ் ஆகியோர் இல்லாத நிலையில் உடற்தகுதியை நிரூபித்தால் மட்டுமே டாவிட் சில்வாவும் இன்றைய ஆட்டத்தில் களமிறங்க முடியும்.

பிரேசில் தாக்குதல் ஆட்டக் காரர் கேப்ரியல் ஜேசுஸ் நல்ல ஆட்டத்திறனுடன் இருப்பது சிட்டிக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம். குரோவேஷியாவின் டைனமோ ஸாக்ரெப் குழுவிற்கெதிராக கடந்த வார மத்தியில் நடந்த சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் ஜேசுஸ் ‘ஹாட்ரிக்’ கோலடிக்க, சிட்டி 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பட்டியலின் ஒன்பதாம் இடத்தில் இருக்கும் ஆர்சனல் குழுவிலும் முக்கிய ஆட்டக்காரர்கள் காயம் அடைந்துள்ளது அக்குழுவிற்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இந்தப் பருவத்தில் 72 மில்லியன் பவுண்டு விலைகொடுத்து வாங்கப்பட்ட நிக்கலஸ் பெபே முழங்கால் காயம் காரணமாக இரு நாட்களுக்கு முன் நடந்த யூரோப்பா லீக் போட்டியில் களமிறங்கவில்லை. உடற்தகுதியை எட்டும் பட்சத்தில் அவர் இன்று களமிறங்கக்கூடும்.

கைரன் டியர்னி, கிரானிட் ஸாக்கா, ராப் ஹோல்டிங், டேனி செபாயோஸ் ஆகியோர் இன்றைய போட்டியில் ஆட மாட்டார்கள். ஹெக்டர் பெல்லரின் உடற்தகுதி பெறுவார் என நம்பப்படுகிறது.

இன்றிரவு நடக்கும் வேறு இரண்டு முக்கியமான ஆட்டங்களில் மான்செஸ்டர் யுனைடெட்-எவர்ட்டன், உல்வ்ஸ்-டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுக்கள் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!