இந்திய அணிக்குச் சாதகம்

சென்னை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இன்று தொடங்கவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்திய அணியின் கையே ஓங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷிகர் தவானும் புவனேஸ்வர் குமாரும் காயம் அடைந்துள்ள நிலையில் அவர்களுக்குப் பதிலாக மயங்க் அகர்வாலும் ஷர்துல் தாக்குரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இருப்பினும், ராகுல் நல்ல ஆட்டத்திறனுடன் இருப்பதால் அவரே இன்றும் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாமிடத்தில் விளையாடும் அணித் தலைவர் கோஹ்லியும் நல்ல ஆட்டத்திறனுடன் இருப்பதால் இந்திய அணியின் ஓட்டக் குவிப்பைக் கட்டுப்படுத்த வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் கடுமையாக முயல வேண்டி இருக்கும்.

ஷ்ரேயாஸ் ஐயர் நான்காவது வீரராக களம் காணலாம். டி20 போட்டிகளில் சொதப்பிய விக்கெட்காப்பாளர் ரிஷப் பன்டுக்குத் திறமையை நிரூபிக்க இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

பந்துவீச்சைப் பொறுத்தமட்டில், சென்னை ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சகல் என இருவருமே சேர்க்கப்படலாம். வேகப்பந்து வீச்சில் தீபக் சாஹரும் முகம்மது ஷமியும் சாதிக்கக் காத்திருக்கின்றனர்.

மூன்றாவது டி20 போட்டியில் களக்காப்பின் போது காயமடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி தொடக்க வீரர் எவின் லூவிஸ் உடற்தகுதி பெறுவார் என நம்பப்படுகிறது.

இதனிடையே, போட்டிக்கு மழையும் பெரும் மிரட்டலாக இருக்கிறது. நேற்று முன்தினம் இரவிலும் நேற்றுக் காலையிலும் சென்னையில் மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம் என்றும் கரையோரப் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளதால் இன்றைய போட்டி நடைபெறுவதில் கேள்விக்குறி நிலவுகிறது. சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் 4 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!