மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 300க்கும் மேற்பட்ட வீரர்களில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 14 வயது வீரரும் இடம்பெற்றிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் 19ஆம் தேதி கோல்கத்தாவில் நடைபெறவுள்ளது.
இந்த ஏலத்தில் கலந்துகொள்ள சுமார் 971 வீரர்கள் பதிவுசெய்து இருந்தனர். அதில் 332 பேர் மட்டுமே ஏலத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஏலத்தில் 14 வயதான ஆப்கான் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது அறிமுகமாகவுள்ளார்.
ஏலத்தில் ஏதேனும் ஒரு அணி நூர் அகமதுவை வாங்கினால் ஐபிஎல் போட்டிகளில் இடம்பெறும் ஆக குறைந்த வயது வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.