ஆர்சனலுக்கு அடி மேல் அடி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் நேற்று முன்தினம் பின்னிரவு நடந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டியை எதிர்கொண்ட ஆர்சனல் குழுவுக்கு மேலும் அடி விழுந்தது.

ஆர்சனல் தற்காலிக நிர்வாகி ஃபிரடி லுங்பர்க் பொறுப்பில் இதுவரை விளையாடிய ஐந்து ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வென்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும், சிட்டி குழு ஆர்சனலின் சொந்த மைதானமான எமிரேட்சில் மிக எளிதில் 3-0 என்ற கோல் எண்ணிக்கையில் வென்றது அதன் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சிட்டியின் கெவின் டி பிரய்ன இந்த ஆட்டத்தில் ஆட்டநாயகனாகத் திகழ்ந்தார். ஆட்டத்தின் முதல் பாதியிலேயே அவர் இரண்டு கோல்கள் போட்டு ஆர்சனலைத் திக்குமுக்காட வைத்தார்.

ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்தில் டி பிரய்ன ஒரு கோல் போட, பின்னர் ஆட்டத்தின் 15ஆம் நிமிடத்தில் சக வீரர் ரஹீம் ஸ்டெர்லிங் இரண்டாவது கோலைப் போட்டார். முதல் பாதி ஆட்டம் முடிய ஐந்தே நிமிடங்கள் இருந்த நிலையில் இன்னொரு கோலையும் போட்டு ஆர்சனலை எழுந்திருக்க முடியாத நிலைக்குத் தள்ளினார் டி பிரய்ன.

ஆர்சனலின் எமிரேட்ஸ் மைதானம் உயிரற்றுக் காட்சியளித்ததாகக் கூறும் பிபிசி செய்தி, அந்தக் குழுவுக்கு முழு நேர நிர்வாகி இல்லாததால் அதன் ஆட்டத்தில் உத்வேகம் இல்லை என விமர்சித்தது.

முன்னாள் நிர்வாகி உனாய் எமெரி நீக்கப்பட்டதை அடுத்து தற்காலிகமாக அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட லுங்பர்க், தமது குழுவினரை உற்சாகப்படுத்தி சிறப்பாக விளையாட வைக்க முடியவில்லை என்பதையே இது காட்டுவதாக காற்பந்து விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதையடுத்து, பிரிமியர் லீக் பட்டியலில் முதல் நான்கு இடங்களிலிருந்து ஆர்சனல் ஏழு புள்ளிகள் வித்தியாசத்தில் பின்தங்கியிருக்கிறது. அதேபோல், ‘ரெலிகேஷன்’ எனப்படும் பட்டியலின் கடைசி மூன்று நிலையில் உள்ள குழுக்களைவிட ஏழு புள்ளிகள் மட்டுமே அதிகம் பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் குழு 1-1 என எவர்ட்டனுடன் சமநிலை கண்டது. ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் எவர்ட்டன் தந்த நெருக்குதலில் சொந்த கோலடித்து பின்னிலைக்குச் சென்ற யுனைடெட், பின்னர் 77ஆம் நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய மேசன் கிரீன்வுட் மூலம் சமநிலை கண்டது.

கடைசி நேரத்தில் வெர்ட்ரோங்கன் கோலடிக்க, உல்வ்ஸ் குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் ஸ்பர்ஸ் 2-1 என்ற கணக்கில் வென்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!