ராவல்பிண்டி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபித் அலி, 32, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுக ஆட்டத்திலேயே சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
இவ்வாண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான அபித் அலி, முதல் போட்டியிலேயே 112 ஓட்டங்களை விளாசினார். இந்நிலையில், இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டி மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அடியெடுத்து வைத்த அவர் ஆட்டமிழக்காமல் 109 ஓட்டங்களை எடுத்தார்.