துபாய்: நிதிப் பற்றாக்குறையினால் பங்ளாதேஷுக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றை டி20 போட்டியாகவும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உள்நாட்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இரண்டையும் ரத்து செய்துள்ளது அயர்லாந்து கிரிக்கெட் வாரியம்.
ஜூன் 2017ல் ஆப்கானிஸ்தானுடன் அயர்லாந்துக்கும் டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டு ஐசிசியின் முழு உறுப்பினரானது.
இந்நிலையில் இந்தத் தொடர் ரத்து செய்யப்பட்டது குறித்து கிரிக்கெட் அயர்லாந்து தலைமை செயல் இயக்குநர் வாரன் டியூட்ரம் கூறியதாவது, “ஐசிசியின் முழு உறுப்பினரான பிறகுகூட வாரியத்தின் நிதி ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இல்லை.
“டெஸ்ட் கிரிக்கெட்டை நடத்த வலுவான அணியை உருவாக்குவது அவசியம். அதற்கு நிறைய முதலீடு தேவைப்படுகிறது.
“டெஸ்ட் கிரிக்கெட்டை நடத்துவதற்கான நிதி ஆதாரங்கள் போதிய அளவில் இல்லை.
"ஒரு டெஸ்ட் போட்டியை நடத்த 10 லட்சம் யூரோக்கள் தேவைப்படும். இதனை திரட்ட இப்போதைக்குச் சக்தியில்லை.” என்று கூறினார்.