லிவர்பூல் இளம் வீரர்கள் சறுக்கல்

பர்மிங்ஹம்: குழுவினரின் சராசரி வயது 19 என, ஆக இளம் வீரர்களைக் கொண்ட குழுவை லீக் கிண்ணக் காற்பந்து போட்டியில் ஆஸ்டன் வில்லாவுக்கு எதிராக நேற்று அதிகாலை களமிறக்கியது லிவர்பூல் குழு.

அடுத்த 24 மணி நேரத்தில் ஃபிஃபா குழு உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்க இருந்த நிலையில் வில்லாவுக்கு எதிராக அனுபவமில்லா வீரர்களை லிவர்பூல் களமிறக்கியதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.

இது, முன்னணிக் குழுக்கள் லீக் கிண்ணப் போட்டிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதையே காட்டுவதாக காற்பந்து விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், அனுபவம் இல்லாவிட்டாலும் அவர்கள் சோடை போகவில்லை என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக, ஹார்வி எலியட் என்ற 16 வயது மட்டுமே நிரம்பிய இளம் லிவர்பூல் வீரர் இந்த வாய்ப்பைக் கையாண்ட விதம் குறித்து, கத்தார் சென்றுள்ள லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப்பும் அவரது முதல்நிலை வீரர்களும் தொலைக்காட்சியில் போட்டியைக் கண்டு பெருமைப்பட்டிருப்பர் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், ஆட்டத்தின் 14ஆம் நிமிடத்தில் கிடைத்த ‘ஃபிரீகிக்’ வாய்ப்பின் மூலம் ஆஸ்டன் வில்லாவின் கோனர் ஹுரிஹான் கோலடித்தார்.

வில்லாவின் இரண்டாவது கோல், லிவர்பூல் வீரர் மோர்கன் போயஸ் மீது பட்டு பந்து லிவர்பூல் கோல்காப்பாளரான கயோமின் கெல்லஹர் தலைக்கு மேல் சென்று சொந்த கோலானது.

பின்னர், மூன்று நிமிடங்கள் கழித்து வில்லாவின் கோடிஜா தமது குழுவின் மூன்றாவது கோலைப் போட்டார். இதைத் தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் முடியும் தறுவாயில் கோடிஜா மறுபடியும் கோல் போட, வில்லா நான்கு கோல்கள் பெற்று முன்னணியில் இருந்தது.

வில்லாவின் கடைசி கோலை ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் மாற்று ஆட்டக்காரராக களமிறக்கப்பட்ட வெஸ்லி என்பவர் போட்டு தமது குழு 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற உதவினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!