கோல்கத்தா: ஐபில் டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் பேட் கம்மின்சை கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.15.50 கோடி கொடுத்து வாங்கியது. ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்லை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 10.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
ஆரோன் ஃபிஞ்ச் (ரூ.4.4 கோடி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு), அலெக்ஸ் கேரி (ரூ.2.4 கோடி, டெல்லி கேப்பிட்டல்ஸ்), கிறிஸ் லின் (ரூ.2 கோடி, மும்பை இந்தியன்ஸ்), கூல்ட்டர் நைல் (ரூ.8 கோடி, மும்பை) ஆகியோர் ஏலம் எடுக்கப்பட்ட மற்ற ஆஸ்திரேலிய வீரர்கள்.
தென்னாப்பிரிக்காவின் கிறிஸ் மோரிசை பத்து கோடி ரூபாய் கொடுத்து அள்ளிச் சென்றது பெங்களூரு அணி. இன்னொரு தென்னாப்பிரிக்க வீரர் ஸ்டெயினை வாங்க எவரும் முன்வரவில்லை.