முன்னேற துடிக்கும் மான்செஸ்டர் சிட்டி

லண்டன்: லெஸ்டர் காற்பந்துக் குழுவை வீழ்த்தி இரண்டாம் இடத்திற்கான புள்ளி இடை

வெளியைக் குறைக்க துடிக்கிறது மான்செஸ்டர் சிட்டி. ஆனால் லெஸ்டரோ, சிட்டியை வீழ்த்தி முதலிடத்தில் உள்ள லிவர்பூலை நெருங்கும் ஆர்வத்தில் உள்ளது.

எனவே இந்த இரு குழுக்களும் மோதவுள்ள இன்றைய இபிஎல் காற்பந்துப் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் கிளப்பியுள்ளது.

லெஸ்டர் பட்டியலில் இந்த அளவுக்கு முன்னேறும் என்று இப்பருவத்தின் தொடக்கத்தில் யாரும் எதிர்பார்க்காத நிலையில், அக்குழுவின் தற்போதைய முன்னேற்றம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இப்பருவத்தில் சிட்டியைவிட அதிக வெற்றியை பெற்றுள்ள லெஸ்டர், அக்குழுவைவிட எட்டு கோல்கள் குறைவாக விட்டுக் கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் எதிர்த்தாக்குதலில் பல வீனமாக உள்ள சிட்டியை வீழ்த்துவது லெஸ்டரின் முன்னணி வீரரான ஜேமி வார்டிக்கு எளிது.

புதன்கிழமை நடந்த இஎஃப்எல் கிண்ணப் போட்டியில், ஆகஸ்ஃபர்ட் குழுவை 3-1 என சிட்டி வென்றது.

என்றாலும், ஆகஸ்ஃபர்ட் குழு பலமுறை சிட்டியின் கோல் எல்லைக்குள் சென்று திரும்பியது கவனிக்கத்தக்கது.

ஆனால், மேன்யூவிடம் அடைந்த தோல்விக்குப் பிறகு கடைசி மூன்று ஆட்டங்களிலும் தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளதால் சிட்டிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

பட்டத்தை வெல்வதற்கான போட்டியில் சிட்டி தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால் இன்றைய போட்டியில் தோல்வியை தவிர்க்க வேண்டியது அவசியம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!