சோதனைகளைக் கடந்து வெற்றிகளைக் குவிக்கிறது

கத்தார்: முதன்முறையாக காற்பந்துக்கான கிளப் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ள லிவர்பூல், ஒவ்வோர் சோதனையையும் வென்று வருவதாகப் பாராட்டியுள்ளார் அதன் நிர்வாகி கிளோப்.

கத்தாரில் நடந்த இறுதிப் போட்டியில் 1-0 என ஃபிளமெங்கோ குழுவை வீழ்த்தி இக்கிண்ணத்தை வென்றுள்ளது லிவர்பூல்.

எந்தக் குழுவும் கோல் போடாததால், இறுக்கமாக சென்று கொண்டிருந்தபோது பிற்பாதி ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்தில் ஃபிர்மினோ உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பி ஏமாற்றமளித்தது.

இதுதவிர லிவர்பூலின் மேலும் இரு கோல் முயற்சிகளும் பலனளிக்கவில்லை.

இந்நிலையில், எதிரணியின் தப்பாட்டம் காரணமாக லிவர்பூலுக்கு வழங்கவிருந்த பெனால்டி வாய்ப்பையும் காணொளி உதவி நடுவர் முறை பரிசீலனைக்குப் பின்னர் கள நடுவர் ரத்து செய்துவிட்டார்.

இரு குழுக்களும் கோல் எதுவும் போடாத நிலையில், ஆட்டம் கூடுதல் நேரம் சென்றது.

கூடுதல் நேரத்தின் 9வது நிமிடத்தில் ரொபர்ட்டோ ஃபர்மினோ கோல் போட்டு லிவர்பூலுக்குக் கிண்ணத்தைப் பெற்று தந்தார்.

இபிஎல் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூல் இப்பருவத்தில் வென்றுள்ள இரண்டாவது கிண்ணம் இது.

கடந்த ஆகஸ்ட் மாதம் செல்சியை வீழ்த்தி யுஇஎஃப்ஏ சூப்பர் கிண்ணத்தை வென்றிருந்தது லிவர்பூல்.

வெற்றிக்குப் பிறகு பேசிய லிவர்பூல் நிர்வாகி கிளோப், “விளையாட்டாளர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. மிகவும் அற்புதமான ஆட்டம்.

“கடுமையாக போாராடிய லிவர்பூல் வீரர்கள் தங்களது அபார ஆட்டத் திறனை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களை நினைத்து பெருமை கொள்கிறேன்.

“அவர்கள் தொடர்ந்து சோதனைகளை எதிர்கொண்ட வண்ணம் உள்ளனர்.

“நாங்கள் ஒவ்வோர் சோதனையையும் வென்று வருகிறோம். இனிவரும் சோதனைகளையும் வெல்வோம் என்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும்,” என்றார்.

மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் அல் ஹிமாம், மோன்ட்ர்ரே குழுக்கள் மோதிய ஆட்டம் 2-2 எனச் சமநிலை கண்டதால், பெனால்டி முறை பின்பற்றப்பட்டது.

அதில் அல் ஹிமாம் குழுவின் இரு கோல்களை மோன்ட்ர்ரேவின் கோல்காப்பாளர் தடுத்ததால் 4-3 என மோன்ட்ர்ரே வெற்றி பெற்

றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!